கட்டுமான பணியை விரைந்து முடிப்பார்களா?

Update: 2024-11-03 13:15 GMT

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பொய்கை-பொய்கை மோட்டூர் சாலையில் மழைநீர் கால்வாய் கட்டும் பணி சில மாதங்களாக நடந்து வருகிறது. அதற்காக தோண்டப்பட்ட பள்ளம் பெரிய அளவில் உள்ளது. அங்கு எச்சரிக்கை பலகைகள், விளக்குகள் எதுவும் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கட்டுமானப் பணியை விரைந்து முடிப்பார்களா?

-ச .பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை. 

மேலும் செய்திகள்