வாணியம்பாடி, சேலம் வழியாக புதிதாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை அவசரமாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வழி இல்லாமல் சிறிது தூரம் சென்று திரும்பி வர வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவமனை எதிரே உள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும்.