ஆரணி ஆரணிப்பாளையம் 7-வது வார்டு பிள்ளையார் கோவில் தெருவின் கடைசி பகுதியில் சமீபத்தில் சிறு பாலம் அமைத்தனர். பாலம் அமைக்கும் பணியின்போது அருகில் இருந்த பழுதடைந்த அடி பம்பையும் சேர்த்து பாலம் அமைத்துள்ளனர். பயன்படாத நிலையில் இருந்தாலும் அதனை அகற்றிவிட்டு சிறு பாலம் அமைக்காமல், அலட்சியம் காரணமாக அடிபம்பை அப்படியே வைத்து பாலம் அமைத்துள்ளனர். நகரமன்ற தலைவர் இருக்கும் வீதியிலேயே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.