அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கைனூர், எப்.சி.ஐ. காலனி, பாக்கியம்மாள் காலனி, அசோக் நகர், ரத்தன் சந்த் நகர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் பிரதான தெருவான இந்திரா தெரு குண்டும் குழியுமாக உள்ளது. பள்ளி செல்லும் மாணவர்கள், வயதானவர்களும் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். அதனை சரி செய்ய நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித பயனும் இல்லை. தெருவை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.