பேரணாம்பட்டு லாரிஷெட் பஸ்நிறுத்தம் அருகே நெடுஞ்சாலைத் துறையினரால் வேகத்தடை அமைக்கப்பட்டது. இந்த வேகத்தடையில் உள்ள கற்கள் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் இந்த வழியாக வாகனத்தில் வருபவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே வேகத்தடையை சீரமைக்க வேண்டும்.