சோளிங்கரை அடுத்த ஜம்புகுளம் கிராமத்தில் இருந்து தொன்டமாநத்தம் கிராமத்துக்கு செல்லும் சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் தற்போது குளம்போல் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. தார்சாலை தற்போது ஜல்லி சாலையாக மாறி உள்ளது. இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ -மாணவிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த தார்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.