சாலையை அகலப்படுத்த வேண்டும்

Update: 2022-09-16 11:08 GMT

ஆரணி தாலுகா சேவூர் முதல் அக்ராபாளையம் வரை செல்லக்கூடிய தார் சாலையை 2 ஆண்டுகளுக்கு முன்பு 2.5 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டும் அகலப்படுத்தி அமைக்கப்பட்டது. அதை சிறுமூர் மற்றும் எஸ்யூவனம் வரை அகலப்படுத்தி தருமாறு பல முறை கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் எந்தப் பலனும் இல்லை. நெல், கரும்பு பாரங்களை டிராக்டர், லாரிகளில் கொண்டு செல்ல போதிய சாலை வசதி இல்லை. வாகனங்கள் எதிர்எதிரே வரும்போது ஒதுங்கி செல்லக்கூட வசதியில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் கிராம சாலையை அகலப்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

-ஆ.கண்ணதாசன், அக்ராபாளையம். 

மேலும் செய்திகள்