சாலையை சீர் செய்ய வேண்டும்

Update: 2022-11-20 12:46 GMT

எங்களது பகுதி காட்பாடி காந்திநகர் 11-வது வார்டில் அரிந்த்நகர் 2-வதுதெரு உள்ளது. அரசு கல்வியியல் இணை இயக்குனர் அலுவலகம் இந்தச் சாலையில் உள்ளது. பாதாள சாக்கடைக்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்ட பள்ளத்தை சரிவர மூடாததால் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் சேறும் சகதியுமாக மாறி விட்டது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜி.சம்பத், அரிந்த்நகர், காந்திநகர். காட்பாடி. 

மேலும் செய்திகள்