வேலூர் விருபாட்சிபுரம் காந்திநகர் 53-வது வார்டில் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு பல மாதங்களாக சாலை அமைக்காமல் உள்ளனர். மழைப் பெய்து விட்டால் அந்த வழியாக பள்ளி, கல்லூரிக்கு செல்ல மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். அங்கு கெங்கையம்மன், கருமாரியம்மன் கோவில் திருவிழாவின்போது தேர் வீதிஉலா செல்வதற்கு சாலை இடையூராக உள்ளது. சாலை அமைத்துத் தர வேலூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெரியசாமி, வேலூர்.