பேரணாம்பட்டு திரு.வி.க.நகர் பாண்டியன் வீதி 3-ல் பஸ் நிலையத்தில் இருந்து திரு.வி.க.நகருக்கு செல்லும் சிறிய தெருவில் சமீபத்தில் பெய்த மழையால் சிமெண்டு சாலை சேதமாகி சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இது, குறுகிய சந்து என்பதால் நெருக்கடி அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அன்றாட பணிகளுக்கு செல்வோர் என பல தரப்பினரும் சேறும் சகதியிலும் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.