திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா நாராயணமங்கலம் கிராமத்தில் சாலை திரும்பும் இடத்தில், கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. சுமார் 1½ ஆண்டுகளாகியும் பள்ளம் மூடப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் இரவு நேரத்தில் வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. விபத்தை தடுக்க உடனடியாக பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.