வேலூர் சத்துவாச்சாரி பேஸ் 1-ல் 19-வது தெருவில் சாலையின் நடுவே பெரிய பள்ளம் உள்ளது. அந்த வழியாக இரவில் வாகனங்களில் செல்வோர் தவறி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். அருகில் உள்ள வீடுகளில் குடிநீர் தொட்டிக்கு ஏற்றப்படும் நீர் வழிந்தோடி இந்தப் பள்ளத்தில் வந்து நிரம்புகிறது. தற்போது மழைப் பெய்துள்ளது. சாலையில் மழைநீர் தேங்கி கிடப்பதாக கருதி யாரேனும் மோட்டார்சைக்கிளில் வரும்போது, பள்ளத்தில் மோட்டார்சைக்கிளும் விழுந்து செல்லும் அவலம் ஏற்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்தப் பள்ளத்தை முரம்பு மண் கொட்டி மூட வேண்டும்.
-திரு, சத்துவாச்சாரி.