படவேடு பகுதியில் கமண்டல நதியில் காளிகாபுரம்-லிங்காபுரம் சாலையில் தரைமட்ட பாலம் சேதமடைந்ததை தொடர்ந்து ரூ.3 கோடியில் புதிய உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்தப்பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கட்டுமான பணி துரிதமாக நடைபெற வில்லை. ஏற்கனவே இருந்த தரைப்பாலத்தின் நடுவே தண்ணீர் வெளியேற கால்வாய் போன்று இடித்து விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சென்றுவர சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி பாலம் கட்டும்பணியை விரைந்து முடிக்க வேண்டும்.