குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-27 06:39 GMT



ஜோலார்பேட்டை- நாட்டறம்பள்ளி சாலையில் போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் இருந்து இடையம்பட்டி செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைநீர் குளம் போல தேங்கி இந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ- மாணவிகள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீர் செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்