தார்சாலை அமைக்க வேண்டும்

Update: 2022-08-02 11:43 GMT



அரக்கோணத்தை அடுத்த தணிகை போளூர் வாணியம்பேட்டையில் இருந்து ஜி.கே.என். நகர் வரை சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்களை கொட்டி பரப்பி விட்டனர். அதன்பின் பல வாரங்களாகியும் சாலை அமைக்கும் பணியை தொடங்கவில்லை. சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகிறார்கள். ஜல்லி கற்கள் மீது தார் ஊற்றி சாலை அமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


மேலும் செய்திகள்