வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல இடங்களில் அமைக்கப்பட்ட தார் சாலை சரியாக இல்லை. குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அதேபோல் வேலூர் கஸ்பா பயர் லைன் பகுதியில் சாலை சரியாக போடவில்லை. குண்டும் குழியுமாக உள்ளது. ஒரு இடத்தில் எலி பொந்து போல் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை முறையாகப் போட வேண்டும். அத்துடன் சேதம் ஏற்பட்ட சாலைகளை குறிப்பிட்ட காலம் வரை பராமரிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.
-ஆர்.காதர், வேலூர்.