வேகத்தடைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-09-20 09:43 GMT



வாணியம்பாடி- ஆலங்காயம் இடையே 18 கிலோமீட்டர் தூரம் உள்ளது. ஆனால் இந்த வழியில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனமும் மிகவும் சிரமப்பட்டு தான் ஆலங்காயம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. 18 கிலோமீட்டர் தூரத்தில் 26 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

-மோகன், ஆலங்காயம்.

மேலும் செய்திகள்