ராணிப்பேட்டை மாவட்டம் நந்தியாலம் முதல் தென்நந்தியாலம் மற்றும் மாங்குப்பம் வரை செல்லும் சாலையை 2 மாதங்களுக்கு முன்பு சீரமைக்கும் பணி தொடங்கியது. சாலையில் ஜல்லி கொட்டியதோடு சரி பணியை கிடப்பில் போட்டு விட்டனர். மேற்படி பணியை இன்னும் தொடங்கவில்லை. இதனால் 2 கிராம மக்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர். சாலை பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும்.
சி.சதிஷ்குமார், நந்தியாலம்