வேலூர் சத்துவாச்சாரி 6-வது தெரு, பகுதி 2 ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தெரு சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு 3 மாதங்கள் ஆகிறது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. தெருவில் முதியோர், குழந்தைகள் நடக்கவே சிரமப்படுகின்றனர். சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகமும், ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெங்கடேஸ்வரன் செல்லப்பன், சத்துவாச்சாரி.