சேத்துப்பட்டு ஒன்றியம் வம்பலூரில் இருந்து கரிக்காத்தூர் வரை உள்ள சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன. சாலையில் போடப்பட்ட தார் பெயர்ந்து பெரிய அளவில் பள்ளமாக உள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு சைக்கிளில் சென்று வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து புதியதாக சாலை அமைத்து தர வேண்டும்.