கலவையை அடுத்த பாப்பேரி கிராமத்தில் இரண்டு கிலோ மீட்டர் நீளம்உள்ள சாலையில் ஜல்லி கொட்டி இரண்டு மாதமாகியும் சாலை அமைக்கவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவசர தேவைக்கு ஆட்டோகூட வரமறுக்கிறார்கள். நடந்துகூட செல்லமுடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக சாலை அமைக்க வேண்டும்.