வேலூர் கஸ்பா விநாயகபுரம் சின்னய்யாநகர் மற்றும் சின்னய்யாநகர் விரிவுப் பகுதியில் உள்ள சாலை சரியாக இல்லை. குண்டும் குழியுமாக உள்ளது. மழைப்பெய்யும் நேரத்தில் மழைநீர் தேங்கி குட்டை குட்டையாக உள்ளது. மேலும் வீடு களில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் சாலையில் தேங்குகிறது. எங்கள் பகுதிக்கு முறையான சிமெண்டு சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அலாவுதீன், கஸ்பா, வேலூர்.