ராணிப்பேட்டையை அடுத்த தண்டலம் கம்பர் தெரு விரிவாக்கம் பகுதியில் பல ஆண்டுகளாக சாலை மற்றும் வடிகால் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு சாலை, வடிகால் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுகுணா, தண்டலம்.