வேலூர் அலமேலுமங்காபுரம் பாங்க்மேன் காலனியில் கடந்த ஒரு மாதமாக சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதற்காக எங்கள் தெருவில் உள்ள வீடுகளின் நுழைவு வாயில்கள் இடிக்கப்பட்டன. எங்கள் தெருவுக்கு வரும் சாலை பகுதியில் கால்வாய் கட்டப்பட்டு மூடப்பட்டு விட்டது. இதனால் வாகனங்கள் அடுத்த தெரு வழியாக வருகின்றன. மக்கள் எங்கள் தெருவுக்குள் வர கால்வாயை தாண்டி வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் முதியவர்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் அவதிப்படுகின்றனர். சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
-ப மனோஜ், அலமேலுமங்காபுரம்.