கிடப்பில் கிடக்கும் பழுதான சாலை

Update: 2022-08-11 14:50 GMT

கிடப்பில் கிடக்கும் பழுதான சாலை

வெள்ளகோவிலில் திருச்சி-கோவை பிரதான சாலை உள்ளது. இந்த வழியாக ஏராளமான கனரக, சரக்கு மற்றும் சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன. வெள்ளகோவிலில் வீரக்குமாரசாமி கோவில் அருகே நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டு அடிக்கடி அந்த இடத்தில் குழாய் சரி செய்து வருவதால், அந்த இடத்தில் சாலை பழுதடைந்து வருகிறது. இதனால் போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்துக்கள் நடைபெற வாய்ப்புள்ளது. தற்போது சாலை சேதம் அடைந்து மாத கணக்கில் ஆகிறது. இதுவரை சரி செய்யப்படவில்லை,. உடனே தரமான முறையில் பழுதான சாலையை சரி செய்ய வேண்டுமாய் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செல்வராஜ், வெள்ளகோவில் 9842 62808

மேலும் செய்திகள்