சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதி

Update: 2022-08-09 10:21 GMT



சோளிங்கர் ஒன்றியம் கோவிந்தச்சேரிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட தலங்கை, பழைய மற்றும் புதிய பாலகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல ெரயில்வே சுரங்கப்பாதை வழியாக சென்று வந்த நிலையில் தற்போது அந்த பாதையில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வேறு வழியின்றி கடந்த 20 நாட்களாக பொதுமக்கள் முடங்கி உள்ளனர். மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உரிய சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்