துண்டிக்கப்பட்ட பாதையால் மக்கள் அவதி

Update: 2025-01-26 12:35 GMT

செங்கம் தாலுகா மேல்வணக்கம்பாடி கிராமத்தில் வேடங்குப்பம் ஏரியை ஒட்டிய பகுதியில் சுமார் 40 வீடுகள் உள்ளன. இங்கு சுமார் 300 மக்கள் வாழ்கிறார்கள். ஏரியில் நீர் நிரம்பியதும், இங்குள்ள மக்கள் ஏற்படுத்திய வழித்தடம் துண்டிக்கப்பட்டு, வழித்தடம் முழுவதும் நீரில் மூழ்கி விடுகிறது. தினமும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்லும் மக்கள், வியாபாரத்துக்கு செல்லும் வியாபாரிகள் , மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், கர்ப்பிணிகள் என அனைத்துத் தரப்பு மக்களும் வெளி உலகுடன் தொடர்பின்றி துண்டிக்கப்பட்டு, அவதிப்படுகின்றனர். நிலங்களில் விளைந்து அறுவடை செய்ய இயலாமல் இருக்கும் பயிர்களும் வீணாகின்றன. நாங்கள் வசிக்கும் பகுதிக்கு மாவட்ட நிர்வாகம் பாதை வசதி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மருதமலை, மேல்வணக்கம்பாடி. 

மேலும் செய்திகள்