திண்டுக்கல்லை அடுத்த கோட்டூர் ஆவரம்பட்டியில் இருந்து பாப்பணம்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதோடு மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.