சர்வீஸ் ரோட்டை சரி செய்யலாமே!

Update: 2026-09-06 15:33 GMT

சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில், பனமரத்துப்பட்டி பிரிவு ரோடு உள்ளது. அங்கு மேம்பாலத்தின் கீழ் 5 சர்வீஸ் ரோடுகள் சந்திக்கின்றன. அதில் சேலம் செல்லும் சர்வீஸ் ரோடு மழைநீரால் சேதமடைந்து ஜல்லிக்கற்கள் சிதறிக்கிடக்கின்றன. இதனால் வளைவு பகுதியில் திரும்பும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் ஜல்லிக்கற்கள் நிறைந்த பள்ளமான சாலையில் சறுக்கி விழுகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சேதமான சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி