சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி, அழகப்பாபுரம் 17-வது வார்டு சாமியார் தோட்டம் கிழக்குப்பகுதியில் உள்ள சாலை மோசமான நிலையில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மழை பெய்யும் போது சாலையில் தண்ணீர் அதிகளவில் தேங்கி கசதிக்காடாக மாறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார்ச்சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.