மோசமான சாலை

Update: 2026-09-06 10:47 GMT

வருக்கதட்டு பகுதியில் தானக்குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகில் இருந்து வௌ்ளிமலைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்ற வருகின்றன. இந்த சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விக்னேஷ் முருகன், வருக்கதட்டு.

மேலும் செய்திகள்