செங்கல்பட்டு மாவட்டம், ராஜகீழ்ப்பாக்கம் யோகேஸ்வரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகள் சேதமடைந்த குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலைகளை சீரமைத்த தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.