தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

Update: 2026-08-30 19:37 GMT
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் மேலம்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கருத்தப்பிள்ளையூர் கிராமத்தில் இருந்து கீழ ஆம்பூர் செல்லும் மெயின் ரோட்டில் குளம் உள்ளது. இந்த குளத்தின் மடை உள்ள பகுதியில் சாலையோரம் பாதுகாப்பு சுவர் எதுவும் இல்லை. இந்த சாலை வளைவாக உள்ளதால் எதிரே வாகனங்களுக்கு வழிவிடுவதற்காக திருப்பினால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இரவில் மின்விளக்கு வசதியும் இல்லை. இங்கு தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

மேலும் செய்திகள்