குமராட்சி அருகே செங்கழுநீர்பள்ளம் கிராமத்தில் உள்ள சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சேற்றில் வழுக்கி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அப்பகுதியில் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.