சாலையோரம் குவியும் குப்பை

Update: 2026-08-30 17:27 GMT

சேலம் 23-வது வார்டு திருவாக்கவுண்டனூர் காமராஜ் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியையொட்டி பள்ளப்பட்டி-திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பிரதான சாலை செல்கிறது. சாலை ஓரத்தில் மணல் குவியலுடன் சேர்ந்த குப்பை கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் உள்ள கால்வாயில் தண்ணீர் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. குப்பை குவியலால் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இதனை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்