கடமலைக்குண்டுவில் இருந்து அண்ணாநகர் வரை செல்லும் தேனி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் மரங்கள், செடிகள் வைக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த செடிகள் நன்கு வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையின் இருபுறங்களிலும் உள்ள செடிகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.