கோவை-திருச்சி சாலையோரத்தில் ஒண்டிப்புதூர் முதல் ராமநாதபுரம் வரை வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் சாலையோரத்தில் நடந்து செல்பவர்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. அத்துடன் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே அந்த சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை போக்குவரத்து போலீசார் தடுக்க வேண்டும்.