கோவை காந்திபுரத்தில் இருந்து வ.உ.சி. பூங்காவிற்கு செல்லும் சாலையில் பார்க்கேட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையில் பெரிய அளவில் பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் அந்த பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் குழி இருப்பது தெரியாமல் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக அந்த பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.