கோவை கணபதி சங்கனூர் சாலையில் இருந்து நல்லாம்பாளையம் செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.