சேதமடைந்த பள்ளி சாலை

Update: 2026-08-09 13:09 GMT

புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள சாலை குண்டும், குழியுமாக மாறி தார் இல்லாமல் கூர்மையான ஜல்லிக்கற்கள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் பள்ளிக் குழந்தைகள் நடந்து செல்லும்போது தடுமாறி விழுந்து காயமடைவதோடு, வாகனங்களின் டயர்களும் அடிக்கடி பஞ்சராகி வருகின்றன. எனவே, மோசமான நிலையில் உள்ள இந்த சாலையை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்