சேதமடைந்த சாலை

Update: 2026-08-02 15:10 GMT

சேலம் ஜான்சன்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் கார், ஆட்டோ பேன்றவைகள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் பணிமனையின் நுழைவு வாயிலின் இருபுறமும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்