தார்சாலையில் பள்ளம்

Update: 2026-08-02 13:47 GMT

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் எம்.தொப்பம்பட்டி ஊராட்சியில் மொரப்பூர்- கம்பைநல்லூர் மெயின் ரோடு பஸ் நிறுத்தத்திலிருந்து ஆண்டிப்பட்டி வழியாக எம்.தொப்பம்பட்டி இணைப்பு சாலை வரை முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த தார் சாலையின் தரத்தை ஆய்வு செய்வதற்காக ஆங்காங்கே சாலைகள் வெட்டப்பட்டன. ஆய்வு முடிந்து பல மாதங்கள் ஆகியும் வெட்டப்பட்ட சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன விபத்துக்கள் ஏற்படுவதுடன் தார் சாலை விரைவாக சேதம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சாலையை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை வேண்டும்.

மேலும் செய்திகள்