வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-07-26 17:37 GMT
வடக்கனந்தல் பேரூராட்சி கச்சிராயப்பாளையம் சர்க்கரை ஆலை எதிரே கட்டுக்கரை மேட்டில் இருந்து கோமுகி ஆறு வரை செல்லும் சாலை இருபுறமும் செடி, கொடிகளுடன் மண்பாதையாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடக்கூட இடம் இல்லாததால் வாகனஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சாலையோர செடி, கொடிகளை அகற்றி அகலப்படுத்தி விரைந்து தார்சாலை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்