கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவில் கிழக்குப் பகுதி மகாத்மா காந்தி நகரில் தார்சாலை அமைக்க ஜல்லிகற்கள் கொட்டப்பட்ட நிலையில் சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.