ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சியில் மரக்கடை தெருவில் சில நாட்களுக்கு முன்பு ஜல்ஜீவன் திட்டத்திற்காக சாலை தோண்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்தும் தற்போது வரை சாலை சீரமைக்கப்படாததால் குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் மக்கள் போக்குவரத்து நிறைந்து காணப்படும் இச்சாலையில் மழை பெய்யும் நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையை சீரமைத்துதர வேண்டும்.