சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-06-21 14:03 GMT

பர்கூர் தாலுகா குறும்பர் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கந்திகுப்பத்திலிருந்து குறும்பர் தெரு செல்லும் தார்சாலை சிதிலமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே காலதாமதம் இன்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கந்திகுப்பம்-குறும்பர் தெருவுக்கு தரமான தார்சாலை அமைத்து கொடுப்பார்களா?

மேலும் செய்திகள்