பெரம்பலூரில் இருந்து எளம்பலூர் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காகப் குழிகள் தோண்டப்பட்டன. பணிகள் முடிந்து இந்தக் குழிகள் மூடப்பட்ட போதிலும், தார்சாலை இதுவரை முறையாக சீரமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுவதால், அவ்வழியாகச் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை முழுமையாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.