கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் இருந்து கொடுமுடி செல்லும் சாலையில், முத்தனூர் - சேமங்கி இடையே தார்சாலையை ஒட்டி ஆபத்தான நிலையில் விவசாயக் கிணறு ஒன்று உள்ளது. தினமும் அரசு பஸ்கள், லாரிகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் இரவு பகலாகச் செல்லும் இச்சாலையில், கிணற்றின் ஓரம் வெறும் ஓரடி உயரச் சுவர் மட்டுமே உள்ளதால் இரவு நேரங்களில் வாகனங்கள் கிணற்றுக்குள் விழுந்து பெரும் விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் அச்சம் நிலவுகிறது. மண் சரிவினால் கிணறு சாலையை ஒட்டி வந்துவிட்டதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்தச் சுவரை 4 அடி உயரமாக உயர்த்த வேண்டும்.