சென்னை சாலிகிராமம் ஆற்காடு சாலை மற்றும் 80 அடி சாலை சந்திப்பில் சென்னை குடிநீர் வாரிய பணிகள் நடைபெற்றன. பணிகள் முடிந்தும், சாலை சரியாக மூடபடவில்லை. இதனால் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. வாகன ஓட்டிகள் அச்சத்துடனே இந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.