சென்னை மேற்கு மாம்பலம்,, தனசேகரன் குறுக்கு தெருவில் பெயர் பலகை இல்லாமல் இருந்தது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக தெருவிற்கு புதிய பெயர் பலகையை அமைத்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.